மெட்ரோ ரெயிலில் முதல் படப்பிடிப்பு

Bookmark and Share

மெட்ரோ ரெயிலில் முதல் படப்பிடிப்பு

சென்னை நகரில் முதன் முறையாக கோயம்பேட்டிலிருந்து, ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து வியந்து வருகிறார்கள்.

கட்டணம் மிகவும் உயர்வு என்ற விமர்சனம் இருந்தாலும் மெட்ரோ ரெயில் சென்னை நகரின் புதிய அடையாளமாகியிருக்கிறது. அதை சினிமாகாரர்கள் விட்டு வைப்பார்களா. இதோ மெட்ரொ ரெயிலில் முதல் படப்பிடிப்பை நடத்துகிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திற்கு பிறகு ஆர்.கண்ணன் இயக்கும் படம் போடா ஆண்டவனே என் பக்கம். இதில் விஷ்ணு, பிரயஹா, சதீஷ் உள்பட பலர்  நடிக்கிறார்கள். சத்யா இசை அமைக்கிறார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

பின்னி மில்லில் ரிச்சி ஸ்ட்ரீட் ஷெட் போட்டு முதல்கட்ட படப்பிடிப்பு வருகிற 9ந் தேதி முதல் நடக்க இருக்கிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு மெட்ரோ ரெயிலில் நடக்கிறது.

ஹீரோ விஷ்ணுவும், ஹீரோயின் பிரயஹாவும் மெட்ரோ ரெயில் பிரயாணத்தின்போது சந்தித்து காதல் கொள்வதாக கதை. இதற்கு அனுமதி கேட்டு மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions