இன்று நேற்று நாளை ஒரு வித்தியாசமான படம்! -விஷ்ணு பேச்சு

Bookmark and Share

இன்று நேற்று நாளை ஒரு வித்தியாசமான படம்! -விஷ்ணு பேச்சு

சி.வி.குமார், ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது இப்படம் குறித்து விஷ்ணு பேசும்போது, இந்த படத்தில் நானும், கருணாகரனும் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தோம்.

எங்களுக்கு ஓய்வே கொடுக்காமல் படமாக்கினார் இயக்குனர். ஆனால், நாயகி மியாவுக்கு அப்படியில்லை. ஒரு ரெண்டு சீன் எடுத்தால் அதையடுத்து நான்கு நாட்கள் ரெஸ்ட்டு கொடுத்துவிட்டு அதன்பிறகுதான் அவரை படப்பிடிப்புக்கு அழைப்பார்கள்.

மேலும், இந்த படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது, சி.வி.குமார் நிறுவனம் என்பதால் சந்தோசமாக சென்றேன். கதையைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். அதேசமயம் பயந்தேன். முதல்தடவை ஒரு டைம் மிஷின் என்கிற விசயத்தை மையமாகக் கொண்ட படம். இது புதுமையாக இருந்தபோதும், முண்டாசுப்பட்டிக்கு பிறகுதான் கேரியர் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இப்படியொரு ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என்றும் நினைத்தேன்.

ஆனால், அப்போதுதான் டைரக்டர் ரவிக்குமார். வித்தியாசமான ஒரு முயற்சியை மற்றவர்கள் செய்வதற்கு முன்பு நாம் செய்து விடுவோம் என்றார். எனக்கு அது ஒரு நல்ல பாசிட்டிவான விசயமாக தெரிந்தது. இப்போது படத்தின் ரிசல்ட்டை பார்க்கையில் சந்தோசமாக உள்ளது. முதல்தடவை இப்படியொரு கதையில் நான் நடித்திருப்பது பெருமையாக உள்ளது.

மேலும் இந்த மாதிரி கதைகளை படமாக்க தயாரிப்பாளர்கள் கிடைப்பது அரிது. ஆனால் சிவிகுமார், ஞானவேல்ராஜா இருவரும் எதையும் வித்தியாசமாக செய்ய நினைப்பவர்கள் என்பதால் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். அதோடு இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க ஆர்யாவை அழைத்தபோது கதையைகூட கேட்காமல் நடித்துக்கொடுத்தார்.

அவரும் இப்போது இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்து இம்ப்ரஸ்சாகி விட்டார். ஆக, டைம் மிஷின் என்கிற ஒரு விசயம் நம்முடைய ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தப்போவது உறுதி என்று சொன்ன விஷ்ணு, நமக்கு அடுத்த பிறவி இருக்குமா என்பது தெரியாது.

ஆனால் நாம எடுத்த பிறவியில் எந்தவொரு பிறவியையும் நாம் பார்க்க முடியும் சந்திக்க முடியும் என்றாலே நாம் அதிசய பிறவிகள்தான். அப்படிப்பட்ட அதிசயமான விசயங்களைத்தான் இந்த இன்று நேற்று நாளை படம் கண்முன் நிறுத்த வருகிறது என்கிறார்.


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions