தமிழ் சினிமாவுக்கு இந்த கதை புதுசு - விஷ்ணு

Bookmark and Share

தமிழ் சினிமாவுக்கு இந்த கதை புதுசு - விஷ்ணு

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற படங்களில் நடித்துவிட்டார்.

தற்போது இன்று நேற்று நாளை என்ற படத்தில் நடித்துள்ளார். விஷ்ணு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். கூடவே கருணாகரன் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். ரவிகுமார் இயக்க, சிவி குமார் தயாரித்துள்ளார். டைம் மிஷனை பற்றிய படமாக இப்படம் உருவாகியுள்ளது. வௌ்ளியன்று படம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் பற்றி விஷ்ணு நம்மிடம் கூறியதாவது, வழக்கமாக ஹீரோ-ஹீரோயின் டூயட், வௌிநாட்டு பாடல் என்று நாம் பார்த்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் ஒரு அறிவியல் சார்ந்த படம்  இன்று நேற்று நாளை.

படத்தில் என் பெயர் இளங்கோ. புதிது புதிதாக பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருப்பவன், ஆனால் நான் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் எனக்கு தோல்வியைத் தான் கொடுக்கும். எனது நண்பராக கருணாகரன், ஒரு ஜோதிடர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

எங்களுக்கு ஒரு டைம் மிஷன் கிடைக்கிறது. எங்க அறிவுக்கு எட்டிய வரை அதை நாங்கள் என்ன செய்கிறோம். அதனால் எங்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமை, பிரச்னைகள் என்ன என்பது தான் படத்தின் கதை.

காதல் கதையையும், பேய் கதையையும், காக்கிச்சட்டை கதையையும் பார்த்து வந்த நமக்கு இந்த டைம் மிஷன் கதை ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். படத்தின் ஆரம்ப காட்சியில் எதிர்கால சென்னை எப்படியிருக்கும் என்பதை யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு படமாக்கியிருக்கிறோம். மேலும் படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோல் செய்துள்ளார். அதுவும் எங்களுக்கு ப்ளஸ் தான் என்றார் விஷ்ணு.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions