சி.வி.குமார் தயாரிக்கும் படத்தில் மீண்டும் விஷ்ணு?

Bookmark and Share

சி.வி.குமார் தயாரிக்கும் படத்தில் மீண்டும் விஷ்ணு?

அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, எனக்குள் ஒருவன், இன்று நேற்று நாளை என பல படங்களை தனது திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரித்து வெளியிட்டவர் சி.வி.குமார். தற்போது இறைவி, 144, எஸ்கிமோ காதல், மாயவன் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது தயாரிப்பில் விஷ்ணு நடித்த முண்டாசுப்பட்டி வெற்றி பெற்றது. அதையடுத்து தற்போது அவர் நடித்து வெளியாகியிருக்கும் இன்று நேற்று நாளை படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்டுக்கு ராசியான நடிகராகி விட்டார் விஷ்ணு.

விளைவு, இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் உதவியாளர் ஒருவரும் அடுத்து சி.வி.குமாரிடம் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணியுள்ளார். அதோடு, சில ஹீரோக்களை அந்த கதைக்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்று முன்பு கூறி வந்த அவர், இப்போது விஷ்ணு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறி வருகிறாராம்.

ஆனால் அந்த படத்தில் நடிக்க விஷ்ணுவிடத்தில் இன்னமும் சிவி.குமார் பேசவில்லை, என்றபோதும் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக அந்த கம்பெனி வட்டாரம் தெரிவிக்கிறது.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions