மீடியாக்களை தவிர்க்கும் விஷ்ணு!

Bookmark and Share

மீடியாக்களை தவிர்க்கும் விஷ்ணு!

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாடு அளவில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். ஒருமுறை விளையாடியபோது ஏற்பட்ட விபத்து காரணமாக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் கிரிக்கெட்டுக்கு முழுக்குப்போட்டு விட்டு சினிமாவில் இறங்கினார்.

அப்படி வந்தவருக்கு முதல் படமே ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து, பலே பாண்டியா, நீர்ப்பறவை, குள்ளநரிக்கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா என பல படங்களில் நடித்தார்.

அந்த வகையில் வெற்றி தோல்வி இரண்டையும் மாறி மாறி சந்தித்து வந்த விஷ்ணு இன்னும் நடிப்பு அளவில் பெரிய ஸ்கோர் எதுவும் செய்து விடவில்லை. இருப்பினும், முன்பெல்லாம் மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்த விஷ்ணுவுக்கு தற்போது அந்த ஆர்வம் சுத்தமாக குறைந்து விட்டது.

கேட்டால், வளரும்போதுதான் நடிகர்களுக்கு பப்ளிசிட்டி தேவை. ஆனால் வளர்ந்த பிறகு அது அவசியமில்லை. நான் நடிக்கும் படங்கள் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும். படம் நன்றாக இருக்கும்போது அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தில்லாக சொல்கிறாராம் விஷ்ணு.


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions