விஷ்ணுவுக்கு டிப்ஸ் கொடுத்த மியா!

Bookmark and Share

விஷ்ணுவுக்கு டிப்ஸ் கொடுத்த மியா!

அமரகாவியம் படத்தில் நடித்தவர் மியா ஜார்ஜ். ஆர்யா தம்பி சத்யாவுடன் அந்த படத்தில் நடித்த அவர், தனது மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனபோதும் படத்தின் தோல்வி காரணமாக அது பேசப்படவில்லை. அதனால் தோல்வி முகத்துடன் கேரளா திரும்பிய மியாவை, சி.வி.குமார் தயாரித்துள்ள இன்று நேற்று  நாளை படத்துக்காக மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்தனர்.

இந்த படத்தில் விஷ்ணுவுடன் நடித்துள்ள மியா ஜார்ஜ், மலையாளத்தில் அனார்கலி, மாந்திரீக தூவல் என தற்போது 4 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் நேற்று இன்று நாளை படத்துக்கு மொத்த கால்சீட்டாக கொடுக்காமல் 2 நாள், 3 நாள் என்று சிறது சிறிதாகத்தான் கொடுத்து நடித்தாராம்.

ஆனபோதும், தனக்காக திட்டமிட்டு வைத்திருக்கும் காட்சிகளை ரீடேக் வாங்காமல் சிங்கிள் டேக்கிலே ஓகே செய்து கொடுத்து இயக்குனரின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார் மியா.

மேலும், அவர் அந்த படத்தில் கமிட்டாகும்போதே, தனது நிலையை சொல்லிவிட்டதால், அவருக்காக காத்திருந்து இப்படத்தில் நடித்துள்ள விஷ்ணு, காத்திருந்து நடித்தாலும் ஒரு நல்ல பர்பார்மென்ஸ் நடிகையுடன் நடித்த திருப்தி எனக்கு கிடைத்திருக்கிறது.

அவரிடமிருந்துகூட நான் சில நடிப்பு டிப்ஸ்களை பெற்றேன் என்று கடைசி நாள் படப்பிடிப்பின்போது அனைவரிடமும் பகிர்ந்து கொண்டாராம்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions