விஷ்ணுவுடன் இணைந்து நடிக்கும் சதீஷ்

Bookmark and Share

விஷ்ணுவுடன் இணைந்து நடிக்கும் சதீஷ்

விஷ்ணு நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தையடுத்து ‘கண்டேன் காதலி’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ ஆகிய படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ என்ற தலைப்பு வைத்திருக்கின்றனர்.

காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தை விஜய் ராஜ் தயாரிக்க இருக்கிறார். கமலின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தற்போது இவர்கள் கூட்டணியில் நடிகர் சதீஷும் இணைந்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான வெற்றிப் படங்களான ‘மான் கராத்தே’, ‘சிகரம் தொடு’, ‘கத்தி’, ‘ஆம்பள’ ஆகிய படங்களில் சதீஷ் காமெடி வேடம் ஏற்று நடித்துள்ளார். இப்படங்களில் சதீஷின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.

தற்போது ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ படத்தில் சதீஷ் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions