எழில் இயக்கத்தில் விஷ்ணு... டாப்ஸி நாயகி

Bookmark and Share

எழில் இயக்கத்தில் விஷ்ணு... டாப்ஸி நாயகி

வெண்ணிலா கபடி குழு படத்தின் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு. முதல்படம் தவிர இவர் நடித்த ஏனைய படங்கள்  சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி ஓரளவுக்கு வெற்றியடைந்த படம்.

மற்றொரு படமான ஜீவா பேசப்பட்ட அளவுக்கு வெற்றியடையவில்லை. எனினும் விஷ்ணுவுக்கு புதுப்பட வாய்ப்புகளுக்குக் குறைவில்லை. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து  'இடம் பொருள் ஏவல்' படத்தில்  நடித்திருக்கும் விஷ்ணு, திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 'இன்று நேற்று நாளை' படத்திலும் நடித்துள்ளார்.

இவ்விரு படங்களும் விரைவில் வெளிவரவிருக்கின்றன. இந்த இரண்டு படங்கள் தவிர 'சேட்டை' கண்ணன் இயக்கத்தில் 'போடா ஆண்டவனே என் பக்கம்' படத்திலும், 'சகுனி' ஷங்கர்தயாள் இயக்கத்தில் 'வீர தீர சூரன்' படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து  எழில் இயக்கத்தில் புதிய படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்க இருக்கிறார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions