விஷ்ணு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Bookmark and Share

விஷ்ணு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

விஷ்ணு நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘வீரதீரசூரன்’. இப்படத்தை கார்த்தியை வைத்து ‘சகுனி’ படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் இயக்கி வருகிறார். விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்ரீன் தெரசா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சென்னை துறைமுகம் பின்னணியில் நெற்றி மற்றும் மூக்கில் காயத்துடன் விஷ்ணு தோற்றமளிப்பதுபோல் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை பார்க்கும்போது, படம் ஒரு ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என்று தெரிகிறது.

இப்படத்தின் கதையை சுசீந்திரன் எழுதுகிறார். வேத் ஷங்கர் இசையமைக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார். ஏ.வி.ஆர்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விஷ்ணு நடிப்பில் உருவான ‘இன்று நேற்று நாளை’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
நரகாசூரன் படத்தில் மேலும் 2 ஹீரோக்கள்
கார்த்தியின் அடுத்த அதிரடி ஆரம்பம்!
பெரும் வசூல் படமான மஹதீரா இந்தி ரீமேக்கில்..
நாளை முதல் துவங்குகிறது ‘வீர தீர சூரன்’
விஷ்ணு, சூரி மீண்டும் இணையும் வீர தீர சூரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions