தியேட்டர் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பிருத்விராஜின் அண்ணன்..!

Bookmark and Share

தியேட்டர் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பிருத்விராஜின் அண்ணன்..!

வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க தயங்காதவர் தான்  மலையாள  இந்திரஜித். பிருத்விராஜின் அண்ணனான இவருக்கு தற்போது மலையாளத்தில் விஷ்ணு விஜயன் என்பவர் இயக்கிவரும் 'அடூரும் தோப்பிலும் அல்லந்தொரு பஷி' என்கிற படத்தில் அப்படி ஒரு கேரக்டரும் கெட்டப் சேஞ்சும் கிடைத்திருக்கிறது.

கதைப்படி தனது குடும்பத்தினருடன் சண்டையிட்டுக்கொண்டு சின்ன வயதிலேயே மும்பைக்கும் செல்லும் சிறுவன், வளர்ந்து, பின்னாளில் தனது தந்தையின் மரணச்செய்தி கேட்டு ஊருக்கு வருகிறான்.

வந்த இடத்தில் தனது தந்தை நடத்திவந்த தியேட்டரை நடத்த வேண்டிய பொறுப்பு அவன் மீது விழுகிறது. இந்த மாதிரி சூழலில் தியேட்டரை நடத்தும் ஒருவன் எதார்த்த வாழ்வில் எதிர்கொள்ளும் சங்கடங்கள், பிரச்சனைகள் தான் கதையாக பின்னப்பட்டுள்ளது.

70, 80, 90களில் நடைபெறும் கதைக்களத்தில் இந்தப்படத்தில் இந்த தியேட்டரின் ஓனராக நடிக்கிறார் பிருத்விராஜ். ஒவொரு காலகட்டத்திற்கு கெட்டப் சேஞ்சில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் இந்திரஜித்.  கதாநாயகிகளாக ரட்சனா நாராயணமூர்த்தி, '1983' புகழ் சிருந்தா ஆஷப் ஆகியோர் நடிக்கிறார்கள் 


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions