தன் படம் குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்ட விஷ்ணு விஷால்!

Bookmark and Share

தன் படம் குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்ட விஷ்ணு விஷால்!

விஷ்ணு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இப்படத்தை விஷ்ணுவே தயாரித்துள்ளார்.

எழில் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் இதில் சூரி, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், விஷ்ணு விஷால் தான் நடித்த ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் எதில் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்.

இதில் பெரும்பாலான ரசிகர்கள் ‘இன்று நேற்று நாளை’ படத்திற்கே அதிக ஆதரவை கொடுத்தனர். அனேகமாக ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions