எழில் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்

Bookmark and Share

எழில் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘இன்று நேற்று நாளை’. இதில் விஷ்ணுவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருந்தார். ரவிக்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். டைம் மிஷினை வைத்து வித்தியாசமான திரைக்கதை கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘தேசிங்கு ராஜா’, ‘வெள்ளக்காரதுரை’ ஆகிய படங்களை இயக்கிய எழில் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் விஷ்ணுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை, பிற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் வெளியிட இருக்கின்றனர்.

விஷ்ணு நடிப்பில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதுதவிர ‘கலக்குற மாப்ளே’, ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions