விஷ்ணு விஷாலுக்கு வில்லனாகும் பார்த்திபன்!

Bookmark and Share

விஷ்ணு விஷாலுக்கு வில்லனாகும் பார்த்திபன்!

விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’ படத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். தற்போது புதிய படம் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இந்த புதிய படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள மஞ்சிமா மோகனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ள நிலையில் தற்போது பிரபல நடிகரும் இயக்குனருமாகிய பார்த்திபன் இப்படக்குழுவினருடன் இணைந்துள்ளார். அனேகமாக பார்த்திபன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பார்த்திபன் ஏற்கனவே 'நானும் ரெளடிதான்' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions