அஜித் படத்தை இயக்குகிறேனா?: விஷ்ணுவர்தன் விளக்கம்

Bookmark and Share

அஜித் படத்தை இயக்குகிறேனா?: விஷ்ணுவர்தன் விளக்கம்

‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக செய்தி பரவியது. சிறுத்தை சிவா படத்திற்கு பிறகு அஜித் தனது 57-வது படமாக விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில்தான் நடிக்கப்போவதாக செய்திகள் வந்தன.

 
ஆனால், இந்த செய்தியை விஷ்ணுவர்தன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, அஜித்தின் அடுத்த படத்தை நான் இயக்கப்போவதாக வந்த செய்திகள் வெறும் வதந்திதான். இதுகுறித்து நானும், அஜித்தும் ஒருமுறைகூட பேசிக்கொண்டதில்லை. 

இருப்பினும், அஜித்தை வைத்து படம் இயக்குவதென்றால் அதில் எனக்கு விருப்பம். என்னுடைய படத்தில் நடிக்க அஜித் ஆசைப்பட்டால், அவருக்காக கதை தயார் செய்ய நான் ரெடி என்று கூறியுள்ளார். 

விஷ்ணுவர்தன் தற்போது ஆர்யா-கிருஷ்ணாவை வைத்து ‘யட்சன்’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தீபா சன்னிதி, சுவாதி ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர். யுடிவி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions