‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் ஆகுமா?

Bookmark and Share

‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் ஆகுமா?

விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகமாக ‘விஸ்வரூபம் 2’ உருவாக்கினார் கமல்ஹாசன். படம் தொடங்கி 2 வருடத்தை தாண்டிவிட்டது. ஆனால் இன்னும் வெளிவரவில்லை.

2ம் பாக படத்துக்கு பிறகு கமல் ஒப்புக்கொண்ட உத்தம வில்லன் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. அடுத்து மலையாளத்தில் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் ‘பாபநாசம்’ படமும் விரைவில் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்படங்களுக்கு முன்பே தயாரிப்பு பணி தொடங்கிவிட்ட ‘விஸ்வரூபம் 2’ எப்போது வெளியாகும் என்று ரசிகர்களும், திரையுலகினரும் கிசுகிசுத்த வண்ணம் இருக்கின்றனர். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கிய கடன் காரணமாக, அவர் மீது வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இனி ‘விஸ்வருபம் 2’ வெளிவராதா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

இதுபற்றி தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது,

‘வங்கி கடனிலிருந்து தயாரிப்பாளர் மீண்டு வருவார். விஸ்வரூபம் படத்துக்கு ரூ. 60 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 50 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் சில பணிகளுக்காக 10 கோடி முதலீடு செய்யப்படும். படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும்’ என்றனர். ஆனாலும் இந்த ஆண்டில் படம் வெளியாவது சந்தேகமே என திரையுலகினர் கூறுகின்றனர். 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions