`விஸ்வரூபம்-2' படத்தின் முக்கிய அப்டேட்

Bookmark and Share

`விஸ்வரூபம்-2' படத்தின் முக்கிய அப்டேட்

கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'.

இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாவது பாகத்திற்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் காட்சிகளை படமாக்குவதில் தொய்வு ஏற்பட்டது.

மேலும் சில பிரச்சனைகளால் `விஸ்வரூபம்-2' கிடப்பில் போடப்பட்டது.
கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தலைப்பில் உருவாகும் `விஸ்வரூபம்-2' படத்தில், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

இந்நிலையில், `விஸ்வரூபம்-2' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக தெரிவித்த கமல், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை சில மாதங்களுக்கு வெளியிட்டார். இந்நிலையில், மீதமிருக்கும் காட்சிகள் வருகிற நவம்பர் மாத இறுதியில் படமாக்கப்பட இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதுஒருபுறம் இருக்க `விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் சிறப்பாக வந்திருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் `விஸ்வரூபம்-2' அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
பாரதியாரான கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
தீபிகாவின் தலை வேண்டும் - உலகநாயகனின் அதிரடி டுவிட்
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . .
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது: டுவிட்டரில் கமல் பதிவு
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்தார் கமல்ஹாசன்
பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!
திரையுலகில் அறிமுகமான பிக் பாஸ் ஜூலி – முதல் படம் யாரோட தெரியுமா?
பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions