விலை போகாத 'விஸ்வரூபம் 2' : அப்செட்டில் கமல்!

Bookmark and Share

விலை போகாத 'விஸ்வரூபம் 2' : அப்செட்டில் கமல்!

'விஸ்வரூபம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் விரைவில் ரிலீசாகும் என்று அந்தப்படம் ரிலீசான சமயத்தில் சொல்லியிருந்தார் கமல்.அவர் சொல்லி இரண்டு வருடங்கள் ஆகி விட்ட நிலையில் உத்தமவில்லன், பாபநாசம் ஆகிய படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார் கமல்.

இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பு, டி2ஹெச் ரிலீஸ் ஆகிய பிரச்சனைகளுக்கு நடுவே விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தான் உதவி செய்தார்.

இதனால் 'விஸ்வரூபம் 2' படத்தையும் அவரையே தயாரித்து , ரிலீஸ் செய்ய அனுமதி கொடுத்த கமல் அதற்காக அந்த தயாரிப்பாளரிடமிருந்து 50 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டார்.

'விஸ்வரூபம் 2' வாங்கிய சமயத்தில் அர்ப்பணிப்போடு வேலை செய்து அப்படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருந்த ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தற்போது கமல் உடனான அந்த டீலிங்கில் இருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறாராம்.

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் அதை வியாபாரம் செய்ய முயற்சித்தபோது அவர் கமலுக்கு கொடுத்த தொகையில் பாதி கூட வியாபாரம் ஆகவில்லையாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கமலை சந்தித்து 'விஸ்வரூபம் 2' படம் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் ஆகவில்லை. அதனால் நீங்களே அதை வியாபாரம் பேசி ரிலீஸ் செய்து கொள்ளுங்கள்.

நான் கொடுத்த 50 கோடியை திருப்பி தாருங்கள் என்று கேட்டிருக்கிறாராம்.அவரின் இந்த பதிலைக்கேட்டு செம அப்செட்டில் இருக்கிறாராம் கமல்.


Post your comment





Related News
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
விஸ்வரூபம் படத்தில் கமல் பயன்படுத்தியிருக்கும் வித்தியாசமான வாகனம் எது தெரியுமா? இதுவும் சர்ச்சையில் சிக்கியுள்ளது
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
தள்ளிப்போனது நயன்தாரா படத்தின் ரிலீஸ்
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions