ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் மோதலா?: கமல் விளக்கம்

Bookmark and Share

ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் மோதலா?: கமல் விளக்கம்

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் நடைபெற்றது. அப்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள ’விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவது ஏன் தாமதம் ஆகிறது என்பது குறித்து பத்திரிகையாளர்கள் கமலிடம் கேள்விகளை தொடுத்தனர்.

அப்போது, பத்திரிகையாளர்கள் கமலை நோக்கி, ‘விஸ்வரூபம்-2’ படத்தை தயாரித்திருக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் உங்களுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதால்தான் இந்த படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என்று கேட்ட கேள்விக்கு கமல் கூறும்போது,
நிச்சயமாக எனக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் இடையில் எந்த மனஸ்தாபங்களும் இல்லை.

அவர் இந்த படத்தை வெளியிடுவதற்கு ஒருசில காரணங்கள் சொல்கிறார். ஆனால், அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அவர் கஷ்டத்தில் இருப்பதுபோலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்றுதான் புரியவில்லை என்று கூறினார்.

‘விஸ்வரூபம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் நடிப்பில் ‘விஸ்வரூபம்-2’ படம்தான் முதலில் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு கமல் ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய இரு படங்களில் நடித்துவிட்டார். இதில் ‘உத்தமவில்லன்’ வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions