விஸ்வாசத்தில் அனிருத்தை ஓரம் கட்டினாரா அஜித்? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசத்தில் அனிருத்தை ஓரம் கட்டினாரா அஜித்? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான ரசிகர்கள் கூட்டத்துடன் மாஸ் நடிகராக விளங்கி வரும் தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படத்தை அடுத்து நான்காவது முறையாக மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைத்துள்ளார்.

விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு கதாநாயகி, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது, மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

வேதாளம், விவேகம் என இரண்டு படத்திற்கும் இசையமைத்து அனிருத் இந்த படத்தில் இல்லை என்ற செய்தி ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி அளித்திருந்தது. அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

 விவேகம் படத்தின் போது அனிருத் பாடல்களை தகுந்த நேரத்தில் கொடுக்காமல் நாட்களை தள்ளி போட்டாராம், அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வேக வேகமாக பின்னணி இசையை முடித்து கொடுத்தாராம்.

இந்த தகவல்கள் எல்லாம் அஜித் காதிற்கு போக அவர் விஸ்வாசம் படத்தில் அனிருத் வேண்டாம் என கூறி விட்டதாக தகவல் கசிந்து உள்ளது. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions