விஸ்வரூபம் 2... பாக்கி பத்து நாள் ஷூட்டிங்கை கமல் நடத்தப்போவது எங்கே தெரியுமா?

Bookmark and Share

விஸ்வரூபம் 2... பாக்கி பத்து நாள் ஷூட்டிங்கை கமல் நடத்தப்போவது எங்கே தெரியுமா?

இந்தப் படம் அவ்வளவுதான்... வராது என்றே திரையுலகினர் முடிவெடுத்துவிட்ட நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை சீரியஸாகவே கையிலெடுத்துவிட்டார் கமல் ஹாஸன்.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் கூட ஓரளவு முடிந்துவிட்டது. பாக்கியிருப்பது பத்து நாள் ஷூட்டிங் மட்டும்தான். இதுதான் தயாரிப்பாளருக்கும் கமல் ஹாஸனுக்கும் பஞ்சாயத்து வரக் காரணமாக இருந்தது.

இப்போது படத்தை கமலே முழுசாகக் கையில் எடுத்துக் கொண்டார். விரைவில் அந்த 10 நாள் படப்பிடிப்பையும் நடத்தப் போகிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்துள்ள இடம் சென்னையில் உள்ள ராணுவ அலுவலர் பயிற்சி மையம் (ஓடிஏ). செயின்ட் தாமஸ் மலையில் உள்ள இந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை. ஆனால் கமல் ஹாஸனுக்காக சிறப்பு அனுமதி கொடுத்திருக்கிறார்களாம்.

இந்த ஆண்டு அக்டோபரில் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.


Post your comment





Related News
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions