'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது!

Bookmark and Share

'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது!

'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியது. இதனை கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

பெரும் சிக்கலுக்கிடையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது விஸ்வரூபம் படம். இந்தப் படத்தை எடுக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகள் 40 சதவீதத்தை எடுத்துவிட்டார் கமல்.

விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு கணிசமான விலைக்கும் விற்றுவிட்டார். ஆனால் படம் மீதியுள்ள காட்சிகளை எடுக்க மேற்கொண்டு கமல் பணம் கேட்டதால், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தர மறுத்தார்.

இதைத் தொடர்ந்து படம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு கமல் நடித்த 'உத்தம வில்லன்', 'பாபநாசம்' 'தூங்காவனம்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகி, நான்காவது படமான சபாஷ் நாயுடு தொடங்கப்பட்டது. இருப்பினும் கமல் நடிப்பில் உருவான 'விஸ்வரூபம் 2' வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து கமலே கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் 'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது என்று கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி ' 'விஸ்வரூபம் 2' படத்தின் தமிழ் போஸ்டர்கள் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியுள்ளது. அதில் தேசிய கொடியை கமல் தனது உடம்பில் போர்த்தியபடி உள்ளது. படத்தின் மற்ற பணிகளையும் இன்னும் இரு மாதங்களுக்குள் முடித்துவிட்டு, அக்டோபரில் படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளாராம் கமல் ஹாஸன்.


Post your comment





Related News
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
விஸ்வரூபம் 2... பாக்கி பத்து நாள் ஷூட்டிங்கை கமல் நடத்தப்போவது எங்கே தெரியுமா?
விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்: இப்ப இந்தியா நிலையும் உங்க முகம் மாதிரி தான் இருக்கு
விஸ்வரூபம் பர்ஸ்ட் லுக் வெளியீடு- எப்போது என கமல் அறிவிப்பு
3 ஆண்டுகளுக்குப் பிறகு தூசி தட்டப்பட்டும் கமலின் விஸ்வரூபம் 2!
விஸ்வரூபம் 2-ன் பெரிய தடைகள் நீங்கவிட்டன: எதை சொல்கிறார் கமல்?
முறுக்கு மீசையுடன் விஜய் சுற்ற இதான் காரணமா?
விஸ்வரூபம் 2 படத்துக்காக கடலுக்கு அடியில் சண்டைபோடும் கமல்!
ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி மீது பணமோசடி புகார்!
போப்பாண்டவர் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து - நடிகர் ரித்திக் ரோஷனுக்கு நோட்டீஸ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions