ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு

Bookmark and Share

ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு

சிவா இயக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக இந்த படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்துகின்றனர். விரைவில் அங்கு படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. 

பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் நடிக்கிறார். அவரது தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அஜித்குமாருடன் தெலுங்கு நடிகை மீனா வாசுவும் சிறிய வேடத்தில் வருகிறார்.

இவர் படப்பிடிப்பில் அஜித்குமாருடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அஜித்குமாரின் உயர்வான குணங்களை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:–

‘‘ஒரு ரசிகையின் இனிய தருணம் இது. அஜித்குமாரை போன்ற ஒரு நல்ல மனிதரை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. எளிமையான, இனிமையான மனிதர் அவர். ஒரு வெற்றிப் படம் கொடுத்த உடனேயே சுபாவத்தில் மாற்றம் வருவதை பல நடிகர்களிடம் நான் பார்த்து இருக்கிறேன்.

ஈகோ என்ற நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்களெல்லாம் அஜித்குமாரின் காலை கழுவி தொட்டு வணங்கினால் அவரது உயர்வான குணத்தில் 10 சதவீதமாவது அவர்களுக்கு வரும் என்பது எனது கருத்து.’’

இவ்வாறு நடிகை மீனா வாசு கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
எப்படி இருந்த தல பட நாயகி இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்.!
ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் `பள்ளிப் பருவத்திலே' - வாசுதேவ் பாஸ்கர்
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?
அஜித், விஜய்யை தொடர்ந்து அதே இடத்திற்கு கிளம்பிய விக்ரம்
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா? அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்தது
தனுஷ் படத்தில் இணைந்த தெறி ஹீரோயின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions