விவேகம் படத்திற்கும் பில்லாவுக்கும் என்ன ஒற்றுமை?

Bookmark and Share

விவேகம் படத்திற்கும் பில்லாவுக்கும் என்ன ஒற்றுமை?

அஜித் நடித்துள்ள படங்களில் மிகவும் முக்கியமானது பில்லா. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2007 ல் படம் ரிலீஸ் ஆனது.

நேற்று அஜித் நடிப்பில் விவேகம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதை பார்த்த பலரும் பாராட்டி வந்தனர்.

பில்லா படத்திற்கும் விவேகம் படத்திற்கும் ஒரு ஒற்றுமையுள்ளது. இதில் இயக்குனர் விஷ்ணு வர்த்தனின் மனைவியான அனுவர்த்தன் தான் இரு படங்களுக்கும் ஆடை வடிவமைத்துள்ளாராம். மேலும் அவர் பில்லா 2, ஏகன், ஆரம்பம், வேதாளம் என அஜித்தின் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

கூடுதலான தகவல் என்னவென்றால் இந்தியில் ஷாருக்கான் ஹீரோவாகவும், அஜித் வில்லனாகவும் நடித்து வெளியான `அசோகா' படத்திற்கும் அனுவர்தனே ஆடை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions