உலக சுற்றுச்சூழல் தினத்தில் 1 லட்சம் மரக்கன்று நடும் விவேக்

Bookmark and Share

உலக சுற்றுச்சூழல் தினத்தில் 1 லட்சம் மரக்கன்று நடும் விவேக்

காமெடி நடிகர் விவேக் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சமூக நலப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில், பசுமை கலாம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நடுவது என்று முடிவு செய்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மரக்கன்றுகளை நட்டு வருகிறார். 


இதுவரை விவேக் 26 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறும்போது, இதுவரை 26 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளேன். ஜுன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் திருநெல்வேலியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுகிறேன். இதனால் மொத்தம் 27 லட்சம் மரக்கன்றுகள் கணக்கில் சேருகிறது. 

என்னுடைய இலக்கு ஒரு கோடி மரக்கன்றுகள். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விவசாயிகளின் தோட்டங்களில் இந்த மரக்கன்றுகள் நடப்படுவதால் அவை முறையாக பராமரிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இத்திட்டம் இன்றைக்கு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. இத்திட்டத்துக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சினிமா கலைஞர்கள் ஆகியோர் விவேக்குக்கு ஆதரவாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். 

இத்திட்டத்தில் முழு ஆர்வத்தோடு செயல்படுகிறவர்களுக்கு அப்துல் கலாம் கையால் நற்சான்றிதழ் வழங்கவும் விவேக் ஏற்பாடு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions