பெற்றோர்கள் பிள்ளைகளிடம் விரும்புவது அன்பை மட்டும்தான் : விவேக் உருக்கம்

Bookmark and Share

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் விரும்புவது அன்பை மட்டும்தான் : விவேக் உருக்கம்

விவேக் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் பாலக்காட்டு மாதவன். குடும்ப பின்னணியில் முழுநீள நகைச்சுவை படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். மேலும், செம்மீன் ஷீலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. 

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் விவேக், நேயர்களுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி வருமாறு: 

‘பாலக்காட்டு மாதவன்’ ஒரு குடும்ப படம். இதுமாதிரி குடும்ப படம் வெளிவந்து ரொம்ப நாளாகி விட்டது. பேய் படம் வருகிற சீசனில் ஒரு தாய் படம் வந்திருக்கிறது. இதில் எனக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் அமைந்துள்ள ஒரு காமெடி படம். 

இந்த படத்தை 75 சதவீதம் காமெடி, 25 சதவீதம் சென்டிமெண்ட் கலந்து எடுத்துள்ளோம். இதில், 75 சதவீதம் காமெடியைவிட கடைசி 25 சதவீதம் வரும் செண்டிமெண்ட் காட்சிகளை மக்கள் வியந்து பார்ப்பார்கள். ஒரு காமெடியன் படத்தில் ஒரு சீரியஸ் கிளைமாக்ஸ் வைத்துள்ளோம். அதை மக்களும் கண்டிப்பாக ரசிப்பார்கள். 

நகைச்சுவை நாயகன் ஹீரோவாக நடிக்கும்போது, அவனே எல்லாவற்றையும் தோளில் எடுத்துப் போட்டுக்கொள்வது மிகவும் தவறு. எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்கவேண்டும். அந்த வகையில் இந்த படத்தில் சோனியா அகர்வாலுக்கும்  நிறைய பங்கு இருக்கிறது. அதேபோல், செம்மீன் ஷீலா அவர்களுக்கும் நிறைய பங்கு இருக்கிறது. 

இதுதவிர, மனோபாலா, சிங்கமுத்து, பாண்டு, இமான் அண்ணாச்சி எல்லோருமே அவங்களுடைய கதாபாத்திரத்தை ரொம்பவும் அழகாக செய்திருக்கிறார்கள். அதனாலதான் இந்த படம் எல்லோரும் ரசிக்கும்படியாக அமைஞ்சிருக்கு. 

பெற்றோர்களை எல்லோரும் நன்றாக கவனிக்க வேண்டும். நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி, வாழ்க்கையில் நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரும் பெற்றோர்களை நமக்கு ஒரு நல்ல நிலைமை வரும்போது அவர்களை மறந்துவிடுகிறோம். 

வேலை நிமித்தமாக வெளிநாடு போகிறவர்கள், முதியோர் இல்லத்தில் அவர்களை விட்டு சென்றுவிடுகிறார்கள். அதையெல்லாம் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். பெற்றோர்கள் கடைசிக் காலத்தில் விரும்புவது பணத்தையோ, புகழையோ, வசதிகளையோ அல்ல. உங்களிடம் இருந்து கிடைக்கும் அன்பைத்தான். அந்த அன்புதான் முக்கியம். அன்பை மட்டும் பெற்றோர்களுக்கு கொடுத்தாலே போதும். 

இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்திற்கு பிறகு நல்ல கதை அமைந்தால் ஹீரோவாகவே நடிப்பேன். இல்லையென்றால், வழக்கம்போல், மற்ற ஹீரோக்களுடன் இணைந்து காமெடி செய்வேன். 

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions