சென்னை மக்களின் நிலை கண்டு எனது இதயத்தில் ரத்தம் வழிகிறது-விவேக்

Bookmark and Share

சென்னை மக்களின் நிலை கண்டு எனது இதயத்தில் ரத்தம் வழிகிறது-விவேக்

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இந்த வெள்ள பாதிப்புக்கு நடிகர்-நடிகைகளும் தப்பவில்லை.

கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில்தான் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

அடையாறில் சீறிக்கொண்டு செல்லும் வெள்ளம் சைதாப்பேட்டையை மூழ்கடித்து தியாகராயநகர், கோடம்பாக்கம் பகுதிகளையும் புரட்டிப்போட்டது.

போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன்பும் வெள்ளம் முழங்கால் அளவுக்கு மேல் ஓடியது. கோட்டூர்புரத்தில் உள்ள நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா வீட்டுக்குள் அடையாறு வெள்ளம் புகுந்தது. 

விருகம்பாக்கம் பகுதியில் உள்ள நடிகர் விவேக் வீட்டையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. அவர் கூறும்போது ‘நான் ஐதராபாத்தில் சிக்கிக்கொண்டேன். சென்னை மக்களின் நிலை கண்டு எனது இதயத்தில் ரத்தம் வழிகிறது’ என்றார்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions