செல்லங்கள் எல்லாம் போச்சு: வர்தாவுடன் போருக்கு கிளம்பிய நடிகர் விவேக்

Bookmark and Share

செல்லங்கள் எல்லாம் போச்சு: வர்தாவுடன் போருக்கு கிளம்பிய நடிகர் விவேக்

பெரும் ஆல மரங்களையே பிடிங்கி எறிந்திருக்கும் வார்தா! உன்னோடு எனக்கு "war"(போர்)தான் என நடிகர் விவேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவான வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. வர்தா புயல் சென்னையை சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றுவிட்டது.

புயல் கரையை கடந்தபோது வீசிய பேய்க்காற்றால் சென்னையில் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்துள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.இன்று இரவுக்குள் சென்னை நகரில் மின்வினியோகம் சீரமைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மரக்கன்றுகளை விரும்பி நட்டு வரும் விவேக் மரங்கள் விழுந்துள்ளதை பார்த்து கவலை அடைந்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,பெரும் ஆல மரங்களையே பிடிங்கி எறிந்திருக்கும் வார்தா! உன்னோடு எனக்கு "war"தான். பசுமையை மீட்பது எப்படி என அரசிடம் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தல ரசிகர்களே கொஞ்சம் இதை செய்யமுடியுமா! விவேகம் வில்லன்
விவேக்கை பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்- காரணம் என்ன தெரியுமா?
எல்லா மீடியாக்களும் விவசாயிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்- பிரபல நடிகர்
ஆனந்த விகடனை புல்லுருவி என திட்டிய விவேகா... செய்தியாளர்கள் எதிர்ப்பு!
டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க ஆர்யா, விவேக் வற்புறுத்தல்
அஜித்தின் வில்லனுக்கு அடித்த யோகம்
நல்லக்கண்ணு, சகாயத்திடம் ஆசி பெறுங்கள்: புது கட்சி துவங்கிய இளைஞர்களுக்கு விவேக் அட்வைஸ்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் விவசாயிகளின் ஒப்புதலை பெற விவேக் வேண்டுகோள்
உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்குனா தக்காளி சட்னியா: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இதுபோன்ற விஷயங்களால் தான் பாவனா போன்ற பெண்களுக்கு இப்படி நடக்கிறது- விவேக் ஆவேசம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions