புரோமேஷன்களில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு பொதுமேடையில் சாட்டையடி கொடுத்த விவேக்

Bookmark and Share

புரோமேஷன்களில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு பொதுமேடையில் சாட்டையடி கொடுத்த விவேக்

காமெடி நடிகர் விவேக் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காஷ்மோரா’ படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளியையொட்டி வருகிற அக்.28-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. 

இந்த சந்திப்பில் நடிகர் கார்த்தி, விவேக், இயக்குனர் கோகுல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்தின் நாயகிகளான நயன்தாராவும், ஸ்ரீதிவ்யாவும் இதில் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி பேசிய விவேக், நயன்தாரா இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவர் வரவில்லை. நடிகைகள் தாங்கள் நடித்த படங்களின் விழாக்களில் கலந்துகொண்டால் செண்டிமெண்டாக அந்த படம் வெற்றியடைவது இல்லை என்று கூறுகிறார்கள். 

அதனால்தான் அவர்கள் எந்த விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை என்று கூறுகிறார்கள். இது நல்ல ஐடியாதான். அப்படியே இன்னொன்றையும் அவர்கள் செய்யலாம். நாங்கள் கடைசி பேமெண்ட் வாங்கினால் அந்த படம் சரியா போகமாட்டேங்குது. அதனால எங்களுக்கு கடைசி பேமெண்ட் வேண்டாம் என்று சொன்னால் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பேசினார்.

விவேக்கின் பேச்சில் கொஞ்சம் காரம் தூக்கலாக இருந்தாலும், அதற்கான காரணமும் இருந்தது. இந்த படத்தில் வழக்கமாக நடிகைக்கும் இவருக்குமான காம்பினேஷன் காட்சிகளே கிடையாதாம். அதுமட்டுமில்லாமல், அப்படி இருக்கக்கூடிய ஒன்றிரண்டு காட்சிகளையும் கிராபிக்ஸ் மூலம் தனித்தனியாக வைத்து படமாக்கிவிட்டார்களாம். இதனாலேயே அவருடைய பேச்சில் கொஞ்சம் காரம் தூக்கலாக இருந்ததாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions