சின்ன கலைவாணர் விவேக் டாக்டர் ஆனார்

Bookmark and Share

சின்ன கலைவாணர் விவேக் டாக்டர் ஆனார்

தமிழ் சினிமாவில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய நகைச்சுவையில் பெரும்பாலும் சமூக சீர்திருத்த கருத்துக்கள் உள்ளடங்கியிருக்கும். அந்த நகைச்சுவைகள் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும்.

இவருடைய நகைச்சுவை கலந்த சிந்தனைக்கு பல படங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். தமிழ் திரைப்படத்துறை வரலாற்றிலேயே நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்வதில் விவேக் வல்லவர்.

தமிழ் திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது. விவேக் நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் கொண்டவர். தற்போது தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கையிலெடுத்து முன்னின்று நடத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூக கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சுமார் 25 ஆண்டுக்ளுக்கும் மேலாக சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டி வரும் விவேக்கிற்கு தற்போது மேலும் மணிமகுடம் கிடைத்துள்ளது.

சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த பட்டமளிப்பு விழா இன்று சென்னைக்கு அருகில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே, சத்யபாமா பல்கலைக்கழகம் இயக்குனர் ஷங்கர், மற்றும் நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions