இன்று நடிகர் விவேக் சந்தித்தார் போலீஸ் கமிஷனரை

Bookmark and Share

இன்று நடிகர் விவேக் சந்தித்தார் போலீஸ் கமிஷனரை

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் விவேக் அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அக்டோபர் 15–ந்தேதி அப்துல்கலாமின் பிறந்தநாள் வருகிறது. அன்று மெரினா கடற்கரையில் விவேக் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான அனுமதியை கேட்பதற்காகவே விவேக் இன்று கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசியுள்ளார்.  

இது தொடர்பாக கேட்டபோது:– கிரீன் கலாம் மரம் நடும் திட்டம் என்ற பெயரில் 2010–ம் ஆண்டில் இருந்து 1 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன். இதுவரை தமிழகம் முழுவதும் 27 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சென்னையிலும் இதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் அப்துல்கலாம் பிறந்தநாளான அக்டோபர் 15–ந்தேதியன்று மெரினா கடற்கரையில் மாணவ–மாணவிகள் பங்கேற்கும் மரம் நடுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க உள்ளேன்.

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப் போவதாக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சிக்குரியது.


Post your comment





Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions