டுவிட்டரில் அஜித்-விஜய் ரசிகர்கள் மோதல்: விவேக் அறிவுரை

Bookmark and Share

டுவிட்டரில் அஜித்-விஜய் ரசிகர்கள் மோதல்: விவேக் அறிவுரை

கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகர், நடிகைகள் இணையதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். அதேசமயம் ரசிகர்கள், மற்ற ஹீரோக்களை விமர்சித்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமீபத்தில், சூர்யாவின் ‘மாசு’ படம் வெளியானபோது, விஜய், அஜித்தை பற்றி வசனங்கள் இடம்பெற்றதற்காக அப்பட இயக்குனர் வெங்கட்பிரபுவை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டனர். பின்னர், வெங்கட்பிரபுவும், சூர்யாவும் இதற்கு விளக்கம் அளித்த பிறகே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.

தற்போது, அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் டுவிட்டர் தளத்தில் தங்கள் மோதல் போக்கை தொடங்கியுள்ளனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘புலி’ படத்தின் டீசரும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

இதை கண்ட அஜித் ரசிகர்கள் அதை கிண்டல் செய்து, டுவிட்டர் தளத்தில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். விஜய் சினிமாவுக்கு கிடைத்த சாபம் என்ற பெயரில் #VijayTheCurseOfCinema என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதை டிரெண்டாக்கி வருகிறார்கள். தற்போது டுவிட்டர் டிரெண்டில் இதுதான் முதலிடத்தை பிடித்துள்ளது.

ரசிகர்களுடைய இந்த மோதல் போக்கு எப்போதுதான் முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் இது நீண்டுகொண்டே இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு அறிவுரை கூறும்விதமாக விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், அஜித், விஜய் இருவருமே நண்பர்கள். ஆனால் ரசிகர்கள் சண்டையிட்டுகொள்வது வருந்தத்தக்கது. வாழ்த்துவோம் வளருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் - அஜித் ரசிகர்களின் இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக முதன்முறையாக ஒரு நடிகர் இவ்வாறு கருத்து கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கும்விதமாக உள்ளது. இனிமேலாவது ரசிகர்கள் தங்களது மோதல் போக்கை கைவிடுவார்கள் என நம்புவோம். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions