விவேக் மகன் இறப்புக்கு கால் முறிந்த நிலையில் நேரில் சென்று ஆறுதல் சொன்ன "தல "

Bookmark and Share

விவேக் மகன் இறப்புக்கு  கால் முறிந்த நிலையில் நேரில் சென்று ஆறுதல் சொன்ன

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் விவேக்கின் 13 வயது மகன் தீவிர மூளைக் காய்ச்சலால் கடந்த நாற்பது நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இதற்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் குமார், தன் கால் முறிந்த நிலையிலும் பிரசன்னா குமாரின் மரணத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

அப்போது அஜித், 'நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா, மரணம் அடைந்துவிட்டார் என்பது நம்ப முடியவில்லை. மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா அமைதி பெறட்டும்' எனக் கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions