கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்

Bookmark and Share

கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்

ஆறுமுகநேரி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தென் தமிழகத்தின் இந்த மண்ணிற்கு உரிய மதிப்பு பிரமாண்டமானது. முருகனுக்கு அறுபடை வீடுகள் இருந்தாலும் சூரனுடன் போர் புரிந்த இடம் என்பதால் திருச்செந்தூர் உலக புகழை பெற்றுள்ளது. அருகில் உள்ள காயாமொழி தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த ஊர்.

ஓட்டப்பிடாரம் என்றால் வ.உ.சிதம்பரனார், எட்டயபுரத்தில் பாரதியார், விருதுநகரில் கர்மவீரர் காமராஜர், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர், ராமநாதபுரத்தில் அப்துல் கலாம், சேதுபதி மன்னர்கள் என்று பெருமைகள் நிறைந்து உள்ளன.

தமிழகத்தில் ரஜினிகாந்த், கேரளத்தில் மம்முட்டி மாதிரி எத்தனை சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் அகில இந்திய அளவில் ஒரே சூப்பர் ஸ்டார் டாக்டர் அப்துல் கலாம் அய்யாதான். ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடத்தில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் புனித பயணத்தை நாளை மறுநாள் (21-ந்தேதி) தொடங்க இருக்கிறார். அவருக்கு உற்சாகமான ஆதரவை தெரிவியுங்கள்.

மன வளர்ச்சி இல்லாதவன் என்று சிறு வயதில் பள்ளி ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு மாணவன் தான் பின்னாளில் மின்சார பல்பு உள்ளிட்ட 1,098 விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு காரணமாய் விளங்கினார்.

மாணவர்களின் ஆர்வம், திறமைகளை அறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். அம்மாக்கள் டி.வி. சீரியல்களில் இருந்தும், அப்பாக்கள் செல்போனில் இருந்தும் விடுபட வேண்டும். குழந்தைகள் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாழுங்கள்.

இன்று நாட்டிற்கு நல்ல தலைமை தேவை. அதற்கு எளிமை, மனிதநேயம், தியாக உணர்வு ஆகிய பண்புகள் மிகவும் அவசியம். அறியாமை என்னும் இருளை அறிவொளி என்கிற தீபத்தால் அகற்றுபவர்கள் தான் ஆசிரியர்கள். மாணவர்கள் அவர்களை மதித்து ஒழுக்கத்துடன் வாழுதல் வேண்டும்.
இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.

விழாவில் நடிகர் விவேக்கின் உதவியாளரான நகைச்சுவை நடிகர் செல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment

Related News
நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்
இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!
சந்திரஹாசன் பற்றி ரஜினி கூறிய வார்த்தை, மேடையில் கண்ணீருடன் கமல்
சினிமாவில் மட்டும் தான் வீரம்! கமல், ரஜினியை விமர்சித்த பிரபல அரசியல்வாதி
கமலுக்கு போட்டியாக ரஜினி எடுத்த அதிரடி முடிவு
பிரபல நடிகரின் படத்தை இணைந்து பார்க்கும் ரஜினி, கமல்- யாருடைய படம் தெரியுமா?
கமலை திடீரென சந்தித்த ரஜினி – காரணம் என்ன?
நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி: கமல், ரஜினிக்கு அழைப்பு
ஒரே இடத்தில் படபிடிப்பு நடத்த போகும் கமல், ரஜினி!
ரஜினிகாந்துக்கு வில்லனாக கமல்ஹாசன்?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions