அப்துல்கலாம் நினைவு அறிவு ஜோதி பயணம்: ராகவா லாரன்ஸ் தொடங்கி வைத்தார்!

Bookmark and Share

அப்துல்கலாம் நினைவு அறிவு ஜோதி பயணம்: ராகவா லாரன்ஸ் தொடங்கி வைத்தார்!

முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைந்த வரும் ஜுலை 27-ந் தேதியோடு ஒரு வருடகாலம் ஆகிறது. அவரை நினைவுநாளையொட்டி, நேற்று சென்னையில் நடிகர் விவேக் தலைமையில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் நடும்விழாவும், மாபெரும் அமைதிப் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அப்துல்கலாம் முதல் நினைவுநாளையொட்டி, சென்னையில் இருந்து ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாமின் பூர்வீக வீட்டை நோக்கி ‘அறிவு ஜோதி’ பயணம் நேற்று தொடங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்று, அப்துல்கலாம் நினைவு ‘அறிவு ஜோதி’யை பிரபல சூப்பர் பைக் ரேஸ் வீரரான தீலிப் ரோஜரிடம் ஒப்படைத்தார்.

இந்த அறிவு ஜோதி ராமேஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்துல்கலாமின் நினைவு நாளான ஜுலை 27-ந் தேதி ராமேஸ்வரத்தில் சுமார் 5000 மாணவர்கள் ஒன்றுதிரண்டு கலாமின் முகமூடி அணிந்து, இந்த அறிவுஜோதியை அப்துல்கலாமின் சகோதரரான மீரா முகமது மரைக்காயரிடம் ஒப்படைக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சமூக ஆர்வலர் அப்துல்கனி முன்னின்று நடத்தி வருகிறார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions