நடிகர் விவேக் மகன் ஆஸ்பத்திரியில் மரணம்!

Bookmark and Share

நடிகர் விவேக் மகன் ஆஸ்பத்திரியில் மரணம்!

நடிகர் விவேக்கிற்கு அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு பெண் குழந்தைகளும், பிரசன்ன குமார் (13) என்ற மகனும் உண்டு.

இவரது மகன் பிரசன்ன குமார் (13). கடந்த ஒன்றரை மாதங்களாக  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

உடல் நல பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக்கின் மகன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

பல கோடி மக்களை தன் நகைச்சுவையால் மகிழ்வித்த இணையில்லா கலைஞனான விவேக்கை, மகனின் மரணம் ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் ஸ்டார் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions