முத்தங்களின் ஆசானே! கமலை வெட்கப்பட வைத்த விவேகா!!

Bookmark and Share

முத்தங்களின் ஆசானே! கமலை வெட்கப்பட வைத்த விவேகா!!

உத்தமவில்லன் படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களிலும் கமலும் பாடியிருக்கிறார். அதேபோல், விவேகா, மதன்கார்க்கியை பாடல் எழுத வைத்தவர் தானும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

இரண்டாவதாக ஒரு பாடலை கமல் எழுத நினைத்தபோது டியூனில் சில வார்த்தைகள் சரியாக உட்காரவில்லையாம். அதையடுத்து அந்த டியூனை விவேகாவிடம் கொடுத்தாராம்.

அவரோ ரொம்ப அற்புதமான வரிகளை போட்டுக்கொடுத்தாராம். குறிப்பாக, முத்த ஸ்பெசலிஸ்ட் நடிகரான கமலை முத்தங்களின் ஆசானே என்று குறிப்பிட்டு அவர் முத்தம் கொடுத்து நடிக்கும் அழகை வர்ணித்து விட்டாராம். அந்த வார்த்தைகளைக்கேட்டு கமலே வெட்கப்பட்டாராம் அந்த அளவுக்கு விவேகாவின் முத்த வர்ணனை அந்த பாடலில் இடம்பெற்றுள்ளதாம்.

அதேபோல் 8ம் நூற்றாண்டு கலைஞராக கமல் நடித்துள்ள உத்தமன் என்ற கேரக்டரை ஓப்பன் செய்யும்போது வில்லுப்பாட்டுக்கலைஞர் சுப்பு ஆறுமுகம் எழுதி பாடிய ஒரு பாடலை ஒலிக்க வைத்திருக்கிறாராம் கமல். அந்த வகையில், தற்போது 80 வயதாகும் சுப்பு ஆறுமுகம் என்ற மகா கலைஞனையும் இந்த படத்திற்குள் கொண்டு வந்து அவரது வில்லுப்பாட்டு கலைக்கு புதிய எனர்ஜி கொடுத்திருக்கிறார் கமல். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions