பணத்திற்காக வசனம் எழுதவில்லை - பாடலாசிரியர் விவேகா!

Bookmark and Share

பணத்திற்காக வசனம் எழுதவில்லை - பாடலாசிரியர் விவேகா!

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்கள், வசனகர்த்தாவாக மாறுவது ஒன்றும் புதிதல்ல... கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மதன் கார்கி உள்ளிட்ட பலர் பாடலாசிரியர்களாக இருந்து வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளனர்.

அந்த வரிசையில் இப்போது பாடலாசிரியரான விவேகாவும் இணைந்துள்ளார். ஏராளமான பாடல்களை எழுதியுள்ள விவேகா, இப்போது ராகவா லாரன்ஸ் இயக்கும், 'ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா' என்ற படத்தில் வசன கர்த்தாவாக பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து விவேகா நம்மிடம் கூறியதாவது,

'முனி', 'காஞ்சனா' போன்ற படங்களில் பாடல் எழுதும் போது லாரன்ஸ் உடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பின் மூலம் இந்த படத்திற்கு வசனகர்த்தாவாக பணியாற்றும் வாய்ப்பு வந்தது. நான் வசனகர்த்தாவாக மாறியது வெறும் பயிற்சிக்காக மட்டுமே தவிர பணத்திற்காக அல்ல.

சென்ற வருடம் 80 பாடல்கள் எழுதினேன். உத்தமவில்லன், தனியொருவன், புலி, வலியவன் இப்படி பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளேன். இந்த வருடம் இன்னும் அதிக அளவில் பாடல்கள் எழுத திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு விவேகா கூறினார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions