இயக்குநர்கள் திரண்ட விழித்திரு படவிழா!

Bookmark and Share

இயக்குநர்கள் திரண்ட விழித்திரு படவிழா!

என்பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீராகதிரவன் இயக்கியுள்ள 2 வதுபடம் விழித்திரு .இப்படத்தை மெயின் ஸ்ட்ரீம் சினிமா புரொடக்ஷன்ஸ் சார்பில் நண்பர்களுடன் அவர் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா தேவி திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ஏகப்பட்ட இயக்குநர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டு பேசினார்கள்.

கணக்கில் எடுத்தால்  பாடல்கள் ட்ரெய்லர் வெளியிட்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணுவும் ஓர் இயக்குநர்தான். . டி.ராஜேந்தர்.ஆர்.வி.உதயகுமார் ,பேரரசு. தம்பிராமையா, விக்ரம் சுகுமாரன், ஆர். கண்ணன், எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி,வெங்கட்பிரபு, சீனுராமசாமி,   ரவிமரியா,லட்சுமணன் போன்ற இயக்குநர்கள். மேடையில் பேசினார்கள். பல இயக்குநர்கள் பார்வையாளர்களாகவும் வந்திருந்தனர்.

இது ஒரே இரவில் நடக்கும் கதையாம். கிருஷ்ணா, விதார்த்,தன்ஷிகா, அபிநயா நடித்துள்ளனர்.இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகியுள்ள பாடகர் சத்தியன் மகாலிங்கம் இசையில் ஏழு இசையமைப்பாளர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர்.விழாவில் கலந்து கொண்டு பேசிய பலரும் இயக்குநர் ஒருவரின் பார்வையிலேயே தங்கள் கருத்துகளைக் கூறிவாழ்த்தினார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions