விரைவில் விழித்திரு இசை

Bookmark and Share

விரைவில் விழித்திரு இசை

'அவள் பெயர் தமிழரசி'  படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியிருக்கும் படம் விழித்திரு.  'மெயின்ஸ்ட்ரீம் சினிமா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கிருஷ்ணா, வெங்கட் பிரபு, விதார்த், தன்ஷிகா, எரிகா ஃபெர்னான்டஸ், அபிநயா முதலானோர் நடித்துள்ளனர்.

சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ள  'விழித்திரு' படம் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.  மீராகதிரவனின் நண்பர்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வந்தனர். அவர்களில் ஒரு நண்பர் திடீரென படத்தயாரிப்பில் இருந்து பின்வாங்கிவிட்டார்.

அதனால் அவர் தருவதாக சொன்ன தொகை வராமல்போனதால் விழித்திரு படம் வளர்வதில் பிரச்சனை ஏற்பட்டது. பாக்கி உள்ள படப்பிடிப்பை முடித்து இப்படத்தை வெளியிட ஒன்றரை கோடி தேவைப்பட்டதால் பல இடங்களில் பண உதவி கேட்டு வந்தார் மீராகதிரவன்.

அவரது நீண்ட போராட்டத்தின் காரணமாக பண உதவி கிடைத்தது. இப்போது இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாம்.  இப்படத்தின் ஆடியோவை இம்மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இசைவெளியீடு நடைபெற்ற சில வாரங்களில் விழித்திரு படத்தையும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions