தொகுப்பாளி அஞ்சனாவை மணக்கிறார் 'கயல்' சந்திரன்

Bookmark and Share

தொகுப்பாளி அஞ்சனாவை மணக்கிறார் 'கயல்' சந்திரன்

பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘கயல்’ படத்தில் நடித்தவர் சந்திரன். இப்படத்தை தொடர்ந்து பிரபுசாலமன் தயாரிக்கும் ‘பைசல்’ என்ற படத்திலும், பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் ‘கிரகணம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியான அஞ்சனாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

அஞ்சனா, பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். தற்போது கோலிவுட்டில் நடக்கும் சில விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், ஒரு விருது வழங்கும் விழாவில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை பார்த்ததும் சந்திரனுக்கு பிடித்துப்போனதாம். முதலில் அஞ்சனாவுக்கு நண்பராக அறிமுகமாகியிருக்கிறார். பின்னர், இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். 

இவர்கள் காதலிப்பதை சந்திரனே உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் வருகிற நவம்பர் 29-ந் தேதி நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர்
புது முயற்சியில் இறங்கிய மணிமேகலை, அசந்து போன ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
வீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions