சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா

Bookmark and Share

சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா

இயக்குநர் என்ற ஒரு முகம் இருந்தாலும், நடிக்க அதிகளவில் வாய்ப்புகள் வருவதால் சமுத்திரகனி தற்போது முழு நேர நடிகராகவே  மாறி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அவர் தற்போது ‘கொளஞ்சி’, ‘ஆண் தேவதை’, ‘ஏமாலி’, ‘காலா’, ‘மதுரை வீரன்’ படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக மணிமாறன் இயக்கத்தில் ‘சங்க தலைவன்’ என்ற படத்தில் நடிக்கிறார். வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி ஜோடியாக டி.வி.தொகுப்பாளினியான ரம்யா ஒப்பந்தமாகி இருக்கிறார். சமுத்திரக்கனியின் மனைவி கதாபாத்திரத்தில் ரம்யா நடிப்பதாக கூறப்படுகிறது. ரம்யா ஏற்கனவே ஓ காதல் கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கைத்தறி தொழிலாளராகவே சமுத்திரக்கனி நடிக்கிறார். கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர்
புது முயற்சியில் இறங்கிய மணிமேகலை, அசந்து போன ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
வீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா?
அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது- முன்னணி பிரபலம் டுவிட்டால் சர்ச்சை, புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions