படத்திற்காக நான் நிஜத்தில் பிச்சை எடுத்தேன் :விஜய் ஆண்டனி பேட்டி

Bookmark and Share

படத்திற்காக நான் நிஜத்தில் பிச்சை எடுத்தேன் :விஜய் ஆண்டனி பேட்டி

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் பிச்சைக்காரன் படம் மார்ச் நான்காம் தேதி வெளியாகிறது . பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க , விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடித்திருக்கிறார் , 

சட்னா டைட்டஸ் இந்தப் படத்துக்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படத்தின் முன்னோட்டத்தையும் நெஞ்சோரத்தில் பாடலையும் திரையிட்டனர் . அந்நிகழ்வில் இயக்குநர் சசி பேசும்போது " படத்தைப் பொறுத்தவரை எடுக்க நினைத்ததை சரியாக எடுத்தேன். 

எல்லோருக்கும் பிடித்து இருந்தது . எனினும் அண்மையில் எனக்குக் கொஞ்சம் பதட்டம் . ஏனென்றால் எனது படத்தை நம்பி விலை கொடுத்து வாங்கிய கே ஆர் பிலிம்ஸ் மற்றும் ஸ்கை லார்க நண்பர்கள் படம் பார்க்க இருந்த நாள் அது . படத்தைப் பார்த்தார்கள் . மறுநாள் அவர்கள் ஆபிசுக்கு போனேன் .

என்னை கார்த்திக் மிகுந்த உற்சாகமாக வரவேற்றார். முன்னை விடவும் உற்சாக வரவேற்பு . அப்போதுதான் எனக்கு நிம்மதி . படத்தை வாங்கிய எல்லாருக்கும் பிடித்தது போலவே டிக்கட் வாங்கி பார்க்க வரும் எல்லோருக்கும் படம் பிடிக்கும் . 

இது பிச்சைக்காரர்களைப் பற்றிய படம் அல்ல . சூழல் காரணமாக பிச்சைக்காரன் ஆகும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதை . இதற்கு பிச்சைக்காரன் என்பதை விட பொருத்தமான டைட்டிலே இல்லை. . 

சரவணன் வேறு யாராலும் முடியாத அளவுக்கு மிகப் பிரம்மாதமாக இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போகிறார் " என்றார் விஜய் ஆண்டனி பேசும்போது " என்னை இசை அமைப்பாளரா அறிமுகப்படுத்தியதே சசி சார்தான், அவர் இயக்கத்தில் படம் பண்ணனும்னு என் ஆசையை தெரிவித்தேன் . 

அவர் சொன்ன கதை இது . கேட்டு முடித்ததும் அடக்க முடியாமல் குமுறிக் குமுறி அழுது விட்டேன். இந்தப் படத்தைத் தயாரித்து நடித்தற்காகப் பெருமைப் படுகிறேன் இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன் .

என்னைப் பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரத்திலிருந்து படம் பிடித்தார்கள் .

சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்குப் பணம் கொடுத்து நடிக்க வைத்தோம் . அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டால் ரொம்ப கொடுமையாக இருந்தது . 

மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளை படிக்க வைக்கும் அப்பா ; அந்தக் குடும்பத்துக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார். 

இப்படிப் பல நிகழ்வுகள் ...நாம் அவர்களை மிகச் சுலபமாக கைகால் இருக்கே உழைக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறோம் அல்லது புறக்கணித்து விட்டுப் போகிறோம் ஆனால் இன்னொரு வகையில் வாழ்வில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான் . பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது .

நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன் . இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் . இந்தப் படத்தை வாங்கிய சரவணனிடம் எல்லோரும் ‘என்ன இது. 

முதன் முதலாபட விநியோகம் பண்றீங்க பிச்சைக்காரன் என்ற படத்தை வாங்கறீங்க?'ன்னு கேட்டு இருப்பாங்க . ஆனா அவர் படத்தை நம்பி வாங்கினார் .இது எல்லோருக்கும் பிடிக்கிற படமா வந்திருக்கு . நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் " என்றார்.


Post your comment





Related News
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions