வி.எஸ்.ராகவன் நடித்த கடைசி படம்

Bookmark and Share

வி.எஸ்.ராகவன் நடித்த கடைசி படம்

தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே சினிமாவில் நடித்தவர் வி.எஸ்.ராகவன், நாடக நடிகராக வாழ்க்கையை தொடங்கி ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். அண்மையில் தனது 90வது வயதில் காலமானார்.

அவர் கடைசியாக அலைவரிசை என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். தனிமையில் விடப்பட்ட ஒரு முதியவருக்கு துணையாக இருப்பது ஒரு ரேடியோ பெட்டி மட்டுமே. தான் பிறந்து தாலாட்டு கேட்டது, வளர்ந்து வாலிபனாகி காதல் பேசியது என அந்த ரேடியோ அவர் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது.

அது ரிப்பேர் ஆகவே அதை சரிசெய்ய டவுனுக்கு கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் பஸ் பயணத்தில் உடன் பயணிக்கும் இளைஞனிடம் தன் கதையை கூறுகிறார். பைக் வாங்கித் தரவில்லை என்பதற்காக தந்தையிடம் கோபித்துக் கொண்டுவந்த அந்த இளைஞன் மனம் திருந்துவதாக முடிகிறது படம்.

சி.எம்.ஷியாம் சுந்தர் என்பவர் இயக்கி உள்ளார். பத்து நிமிடம் ஒடும் இந்தப் படத்தை யூ டியூப்பில் காணலாம். 90 வயதுக்கு மேலும், இளைஞர்களின் உணர்வுக்கு, ஆர்வத்துக்கு மதிப்பு கொடுத்து அவர் நடித்துக் கொடுத்திருப்பது அந்த மகத்தான கலைஞனின் பெருந்தன்மையை காட்டுகிறது.


Post your comment





Related News
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பிரபல முன்னணி நடிகையின் முன்பு காம கொடூரன் செய்த செயல் - அதிர்ச்சியில் திரையுலகம்.!
தல அஜித்தை பார்த்துட்டேன், துள்ளி குதிக்கும் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்.!
நட்சத்திர விழாவிற்காக விமான நிலையம் வந்தும் இத்தனை பிரபலங்கள் திருப்பி அனுப்பட்டார்களா- அதிர்ச்சி தகவல்
விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions