இறுதிக்கட்டத்தை நெருங்கும் விஎஸ்ஓபி

Bookmark and Share

இறுதிக்கட்டத்தை நெருங்கும் விஎஸ்ஓபி

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்திற்கு பிறகு ஆர்யா-ராஜேஷ் ஒன்றாக இணைந்திருக்கும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க (விஎஸ்ஓபி)’. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். வழக்கமாக ராஜேஷ் படங்களில் மையமாக விளங்கும் சந்தானம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் முக்கியமான காட்சிகள் எல்லாம் படமாக்கிவிட்டனர். சிறு சிறு காட்சிகள் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே இன்னும் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தின் பெரும்பகுதியை கும்பகோணம் பகுதியில் படமாக்கியுள்ளனர். 

விஎஸ்ஓபி, நட்பை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இதில் ஆர்யா வாசு கதாபாத்திரத்திலும், சந்தானம் சரவணன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்களாம். விஷால் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். பானு, வித்யு ராமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions