சந்தானத்தின் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! - விடிவி கணேஷ்

Bookmark and Share

சந்தானத்தின் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! - விடிவி கணேஷ்

கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு-த்ரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இருந்தே ரசிகர்களை கவர்ந்து வருபவர் விடிவி கணேஷ். மேலும், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இருந்து சந்தானம் நடிக்கும் பல படங்களில் விடிவி கணேசும் இடம்பிடித்து வருகிறார்.

அதோடு, பவர்ஸ்டாரை கலாய்ப்பது போல்தான் கணேஷையும் சந்தானம் யூஸ் பண்ணி வருகிறார். என்றாலும், நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கிடையிலான நட்பு பாலம் சமீபகாலமாக ரொம்ப உறுதியாகியிருக்கிறதாம்.

அதாவது, தான் எந்தவொரு விசயத்தை செய்தாலும் அதற்கு முன்பு விடிவி கணேஷிடம் இப்படி செய்தால் நன்றாக இருக்குமா என்று ஆலோசனை கேட்ட பிறகுதான் அதில் இறங்குகிறாராம் சந்தானம்.

அவர்களது இந்த நட்பு குறித்து விடிவி கணேஷ் கூறும்போது, எனக்கு தெரிந்த வரை சந்தானம் மிகப்பெரிய உழைப்பாளி. அதோடு தன்னம்பிக்கை உடையவர். அதற்கெல்லாம் மேலாக அவர் ஒரு தைரியசாலி.

அதுதான் எனக்கு அவரிடத்தில் ரொம்ப பிடிக்கும். காரணம். தான் ஒரு காமெடியன் தன்னால் ஹீரோவாக ஜெயிக்க முடியுமா என்கிற துளியளவு சந்தேகம்கூட அவரிடம் கிடையாது.

என்னால் முடியும், நான் ஜெயிப்பேன் என்று அவர் தைரியமாக களமிறங்கியிருக்கிறார். அதோடு தான் நடிக்கும் படத்தை தானே தயாரிக்கவும் செய்கிறார். கூடவே, இந்த படத்தை யாரும் வாங்கவில்லையென்றால் நானே உலகமெங்கிலும் வெளியிடுவேன் என்றும் தில்லாக சொல்கிறார்.

இது எனக்கு தெரிந்தவரை இன்றைய தருவாயில் யாருக்கும் வராது. அதனால் அவரை நான் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் விடிவி கணேஷ்.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions