ஜனவரி இறுதியில் விக்ரம்பிரபுவின் வாகா!

Bookmark and Share

ஜனவரி இறுதியில் விக்ரம்பிரபுவின் வாகா!

இது என்ன மாயம் படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு இப்போது வாகா, வீர சிவாஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படத்துக்குப்படம் தன்னை மாறுபட்ட கோணங்களில் வெளிப்படுத்தி வரும் விக்ரம்பிரபு, நடிப்பிலும் படத்துக்குப்படம் மெருகேறிக்கொண்டே வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கி வரும் வாகா படத்தில், இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு இளைஞனுக்கும், பாகிஸ்தானைச்சேர்ந்த ஒரு பெண்ணுக்குமிடையே நடக்கும் காதலை மையப்படுத்திய கதையில் நடித்திருக்கிறார். 

இப்படம் பற்றி டைரக்டர் ஜி.என்.ஆர்.குமாரவேல் மேலும் கூறுகையில், “வாகா படம் வித்தியாசமான கதைக்களம் மட்டுமின்றி, இதுவரை ரசிகர்கள் கண்டிராத லொகேசன்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகள் அதிக ஈர்ப்புடையதாக இருக்கும். 

இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்து விட்டது. இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும். அதனால் ஜனவரி மாதம் இறுதியில் வாகா படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்கிறார்.

மேலும் இந்த படத்திற்காக வாகா பார்டரில் ஸ்பெசல் அனுமதி பெற்று விக்ரம் பிரபு-ரன்யா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions