87 ஆண்டுகளுக்கு முந்தைய டிஸ்னி திரைப்படம் கண்டுபிடிப்பு

Bookmark and Share

87 ஆண்டுகளுக்கு முந்தைய டிஸ்னி திரைப்படம் கண்டுபிடிப்பு

‘ஸ்லெய் பெல்ஸ்’ என்ற  டிஸ்னியால் உருவாக்கப்பட்ட மிக்கி மவுஸுக்கும் முன்னோடியான ஆஸ்வால்டு ‘த லக்கி ரேபிட்’-டை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டுள்ளது. 

ஊமைப் படங்களின் காலகட்டத்தில் திரைக்கு வந்த டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படம் சுமார் 87 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்தின் ஆவண காப்பகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆறு நிமிட படமான இது இத்தனை ஆண்டுகளாக திரைப்படச்சுருளில் மிஞ்சியிருப்பது ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். 

இப்படம் பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்தின் திரையரங்கில் வரும் டிசம்பர் 12-ம் தேதி திரையிடப்பட இருக்கின்றது. ஊமைப்படங்களின் காலகட்டமான 1928-ம் ஆண்டு வெளிவந்த ஸ்லெய் பெல்ஸ், டிஸ்னியின் படைப்புகளின் ஆரம்பகட்டத்தை நம் கண்முன் காண்பிக்க வல்லது.

இதனால் அந்த காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு, தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்த டிஸ்னியின் ஒப்பில்லா ஆற்றல், ஸ்லெய் பெல்ஸின் மூலம் இளம் தலைமுறைக் கலைஞர்களுக்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
உலகம் முழுவதும் பாகுபலி படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா- அதிர்ந்த திரையுலகம்
வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா?
இன்று உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீஸ்!
உலகளவில் தோனியின் பிரம்மாண்ட வசூல் எவ்வளவு தெரியுமா?
உலக திரைப்பட விழாவில் பங்கேற்கும் சூர்யா படம்
உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி!
தமிழ்ப் படங்களை மிஞ்சும் ஜுராசிக் வேர்ல்டு!
ஜுராசிக் வேர்ல்டு படத்தின் உலக வசூல் சாதனை
பள்ளி குழந்தைகளுக்கு உலக இசை சினிமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions