சினிமா படங்களாகும் நாடகங்கள்: ஒய்.ஜி.மகேந்திரன்

Bookmark and Share

சினிமா படங்களாகும் நாடகங்கள்: ஒய்.ஜி.மகேந்திரன்

நாடகங்களை சினிமா படங்களாக எடுக்கிறார்கள் என்றார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

சினிமா நடிகர், நடிகைகள் பலர் நாடகத்தில் இருந்து வந்தவர்கள்தான். நானும் நாடக நடிகர்தான். நிறைய நாடகங்களில் நடித்து விட்டேன். நாடகங்களில் நடிப்பதற்காகவே சினிமா வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன்.

தற்போது நிறைய படங்களில் நாடகங்களின் தாக்கம் இருக்கிறது. நாடகத்தில் இடம் பெற்ற கருவை வைத்து படங்கள் எடுக்கிறார்கள்.

குற்றமே நடக்காத ஒரு கிராமத்துக்கு செல்லும் போலீஸ்காரர்களை வைத்து ஒரு படம் உருவாகிறது. அந்த படமும் நான் நடித்த ஒரு நாடகத்தின் கதைதான். நாடகங்களை வளர்க்க சினிமா நடிகர்கள் ஆதரவு தர வேண்டும்.

சொப்பன வாழ்வில் என்ற பெயரில் புது நாடகம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். மூளை வளர்ச்சி குன்றிய ஒருவனின் வாழ்க்கையே இதன் கதை கோபுபாபு இதை எழுதி உள்ளார். ரமேஷ் விநாயகம் இசையமைக்க உள்ளார். யுவஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். இந்த நாடகத்தை வருகிற 21–ந்தேதி வாணிமகாலில் அரங்கேற்றம் செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்
அடுத்த படத்திற்காக கிரிக்கெட் பயிலும் ஜீவா
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா? - நடிகை ஓவியா விளக்கம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions