உயரமான ஹீரோவுக்கு குள்ளமான ஹீரோயின்: வித்தியாசம் காட்டும் புதுமுக இயக்குனர்

Bookmark and Share

உயரமான ஹீரோவுக்கு குள்ளமான ஹீரோயின்: வித்தியாசம் காட்டும் புதுமுக இயக்குனர்

இயக்குனர் ஹரியுடன் ‘சிங்கம்-2’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரஷாந்த் என்பவர் தற்போது ‘யானும் தீயவன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. 

இப்படத்தில் அஸ்வின் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். வர்ஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம், விடிவி கணேஷ், பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் கதைக்கு ஹீரோ சற்று உயரமாக இருக்க வேண்டும் என்பதற்காக உயரமான ஹீரோவாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளனர். அதேபோல், உயரமான ஹீரோவுக்கு உயரமான ஹீரோயின் இருந்தால் வித்தியாசம் இருக்காது என்பதால், அவரை விட ரொம்பவும் குட்டையான ஹீரோயினாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளனர். இந்த படத்தின் கதைக்கு இதுபோன்ற கதாபாத்திரங்களின் தேர்வும் ஒரு முக்கிய பங்களிக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர். 

இப்படத்தின் ஒவ்வொரு பாடலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கு தெலுங்கு இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி என்பவர் இசையமைத்திருக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

ஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் ஆகியோர் இணைந்து ‘பெப்பி சினிமாஸ்’ என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்கள். இப்படத்தின படப்பிடிப்பை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions