யாழ் பட டைரக்டருக்கு காக்கா முட்டை கொடுத்த நம்பிக்கை!

Bookmark and Share

யாழ் பட டைரக்டருக்கு காக்கா முட்டை கொடுத்த நம்பிக்கை!

டைரக்டர் ஆனந்த் இயக்கியிருக்கும் படம் யாழ். வினோத், சசி, மிசா, லீமா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஒரு உயிரோட்டமான காதல் கதையின் பின்னணியில் உருவாகியிருக்கிறது. இலங்கையின் போர்க்கால சூழலில் ஒரு காதல் மலர்ந்து அது சந்திக்கும் பிரச்சினைகள்தான் இந்த படம்.

மேலும், இந்த இலங்கை தமிழ்ப்படத்தில் முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே நடித்திருப்பதோடு, தமிழ்நாட்டிலேயே முழு படமும் படமாக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு இலங்கை பின்னணியில் எத்தனையோ படங்கள் வெளியானபோதும் இந்த யாழ் படம் அந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் கதையில் உருவாகியிருப்பதாக சொல்கிறார் அப்படத்தின் இயக்குனர் ஆனந்த்.

குறிப்பாக இப்படத்தில் இலங்கையின் அரசியலை சொல்லவில்லை. தமிழ் காதலை மட்டுமே சொல்லியிருக்கிறேன் என்கிறார். அதோடு, இந்த படத்தில் 2 மணி நேரத்தில் மூன்று விதமான கதைகளை சொல்லியிருப்பதாக கூறும் அவர், இது 100 ஆண்டு கண்ட தமிழ் சினிமா பார்க்காத புதுமையான கதை வடிவம் என்கிறார்.

இந்த படத்தைப் பார்த்தவர்கள் இப்படம் உலக தரத்தில் உள்ளது. விருதுக்கான அம்சங்களும் அதிகமாக உள்ளது என்றார்களாம். ஆனபோதும, படத்தில் கமர்சியல் விசயங்களே அதிகமாக உள்ளது என்று கூறும் டைரக்டர் ஆனந்த், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காக்கா முட்டைப் படத்தைப்பார்த்த பிறகு எனக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்கிறார்.

காரணம், காக்கா முட்டை படத்தைப் போன்றுதான் எனது யாழ் படமும் ஒரு உணர்வுப்பூர்வமான விசயத்தை பதிவு செய்திருக்கிறது. அதனால், இந்த படத்திற்கு கண்டிப்பாக தமிழ் ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை இப்போது எனக்கு நூறு சதவிகிதம் ஏற்பட்டுள்ளது என்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions